close
Choose your channels

கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் விலகல்: புதிய கேப்டன் யார்?

Friday, October 16, 2020 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடந்து வரும் நிலையில் இன்று கொல்கத்தா அணி, மும்பை அணியுடன் மோத உள்ளது. இந்த நிலையில் கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்

தான் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த இருப்பதாகவும், அதனால் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாகவும் தனக்கு பதிலாக இயான் மோர்கனுக்கு கேப்டன் பதவி வழங்கும்படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இதனை அடுத்து இன்றைய போட்டியில் இயான் மோர்கன் அணிக்கு தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே கொல்கத்தா அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றியும் மூன்றில் தோல்வியும் அடைந்து 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

உலக கோப்பையை இங்கிலாந்து அணிக்கு பெற்று கொடுத்த இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் தலைமையில் கொல்கத்தா அணி இந்த ஆண்டின் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.