close
Choose your channels

இயக்குனர் சுசீந்திரனின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்கள்

Saturday, December 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'வெண்ணிலா கபடிக்குழு' மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் 'அழகர்சாமியின் குதிரை', 'பாயும் புலி' 'பாண்டிய நாடு', 'ஜீவா', 'உள்பட பல திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசீந்திரன்

இவர் தற்போது இயக்கி வரும் படங்களில் ஒன்று 'ஏஞ்சலினா. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் இந்த படம் இன்று சென்சார் செய்யப்பட்டு அதன் தகவல்களும் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர்.

முற்றிலும் புதுமுகங்கள் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள 'ஏஞ்சலினா' படத்திற்கு 'டி.இமான் இசையமைத்துள்ளார். ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவில், தியாகு படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.