close
Choose your channels

ரூ.1000 கோடி பட்ஜெட்டில் ஷங்கரின் கனவுப்படம்: ஹீரோக்கள் இவர்களா?

Tuesday, July 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகில் முதல் முதலில் பிரமாண்டத்தை கொண்டு வந்தது இயக்குனர் ஷங்கர்தான் என்பதும் அவருடைய ஒவ்வொரு படமும் பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும் என்பதும் குறிப்பாக அவருடைய படங்களில் உள்ள பாடல்கள் நினைத்துகூட பார்க்க முடியாத அளவுக்கு பிரமாண்டத்தின் உச்சமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் ஷங்கரின் கனவு படம் ஒன்று நீண்ட நாள் அவருடைய மனதில் இருப்பதாகவும் அந்த படம் ரூபாய் 1000 கோடி பட்ஜெட்டில் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நீருக்கடியில் அறிவியல் கலந்த ஒரு கதையம்சம் கொண்ட இந்த படத்தை விரைவில் இயக்க அவர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஷங்கரின் இந்த கனவு படத்தின் ஹீரோக்களாக ஹிருத்திக் ரோஷன் மற்றும் ராம்சரண் தேஜா நடிக்க உள்ளதாகவும் சர்வதேச அளவில் இந்திய சினிமாவுக்கு பெருமை தரக் கூடிய படமாக இந்தப் படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் தேஜா நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தை முடித்தவுடன் அவர் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos