close
Choose your channels

அஜித், அனுஷ்கா, டாப்ஸி, தமன்னா… பல பிரபலங்களின் பிட்னஸ் ட்ரெய்னர்- சிக்ஸ் பேக் வைத்த ஒரு பெண்ணா???

Wednesday, September 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித், அனுஷ்கா, டாப்ஸி, தமன்னா… பல பிரபலங்களின் பிட்னஸ் ட்ரெய்னர்- சிக்ஸ் பேக் வைத்த ஒரு பெண்ணா???

 

இந்தியாவின் முதல் பாடி ரெய்னர் என்ற பெயர் எடுத்தவர் கிரண் டெம்ப்ளா. சிக்ஸ் பேக் வைத்த பெண்கள் வரிசையிலும் இவர்தான் டாப். தற்போது தமிழ் திரையுலகில் அஜித், சூர்யா, டாப்ஸி, தமன்னா தெலுங்கில் ராஜமவுலி, அனுஷ்கா, பிரபாஸ் எனப் பலருக்கும் பாடி ரெய்னராக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு காலத்தில் நீச்சல் குளத்தில் இறங்கவே பயந்தாராம். ஆனால் இன்று பல பிரபலங்களுக்கும் பாடி ரெய்னராக இருப்பதோடு சிக்ஸ் பேக் வைத்து திரையுலகையே மிரட்டுகிறார்.

தெலுங்கானா ஹைத்ராபாத்தை பூர்வீகமாகக் கொண்ட கிரண் டெம்ப்ளா 33 வயதில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக எல்லா பெண்களைப் போலவும் மிக எளிமையான வாழ்க்கையைத்தான் நடத்தி வந்திருக்கிறார். ஆனால் திடீரென அவரது மூளையில் ரத்தம் உறைந்து இருப்பது கண்டுபிடிக்கப் பட்டு இருக்கிறது. இதுதான் அவரது வாழ்க்கையே புரட்டியும் போட்டியிருக்கிறது. ஜெர்மனிக்கு சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஹைத்ராபாத்திற்கு திரும்பியிருக்கிறார்.

ஆனால் அவரது உடல் எடை படிப்படியாக கூடிக்கொண்டே இருந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் 75 கிலோ அளவிற்கு உயர்ந்து இருக்கிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத கிரண் கடந்த 2007 இல் முதன் முதலில் நீச்சல் செய்ய ஆரம்பித்து இருக்கிறார். ஆனால் ஒரு மாதம் நீச்சல் வகுப்புக்கு சென்றபி றகும் நீச்சல் குளத்தில் இறங்கவே பயமாக இருந்ததாம். அடுத்து நண்பர் ஒருவரின் உதவியோடு யோகா கற்றுக்கொள்ள சென்றிருக்கிறார். அப்போது வொர்க் ஹவுட் செய்யவும் ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் வீட்டிற்கு அருகிலே இருந்த உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்றிருக்கிறார்.

உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல ஆரம்பித்து 6-7 மாதங்களில் 25 கிலோ எடையை குறைத்து இருக்கிறார். அதன் மூலம் அவர் இளமையாக உணர்ந்த அனுபவத்தை பல நேரங்களில் பகிர்ந்து கொள்ளவும் செய்கிறார். அடுத்து 2008 இல் உடற்பயிற்சியாளராக ஆவதற்கு உரிய வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சியும் எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பேகம்பேட் பகுதியில் சொந்தமாக உடற்பயிற்சி கூடம் ஒன்றையும் நிறுவியிருக்கிறார். முதன் முதலில் நடிகர் ராம் சரணின் மனைவி உப்சனா கம்மினேனிக்கு பயிற்சி அளித்து இருக்கிறார். படிபடியாக இவரது புகழ் திரையுலகப் பிரபலங்களை எட்டியிருக்கிறது.

அதனால் தற்போது இவரிடம் பயிற்சி எடுத்துக் கொள்ளும் பாகுபலி தமன்னா, அனுஷ்கா, ராஜமவுலி, பிரகாஷ் ராஜ், பிரபாஸ் இப்படி இவரது பட்டியல் நீண்டுக் கொண்டே இருக்கிறது. தற்போது தென்னிந்திய திரையுலகினர் இவரை லேடி பாடி டிரெய்னர் என்றே அழைக்கின்றனர். சிக்ஸ் பேக் வைத்து அசத்தும் இந்தப் பெண்மணி ஒரு டி.ஜே வாகவும் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைத்தவிர மலையேறும் ஆர்வமும் இவருக்கு இருக்கிறதாம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு எவரெஸ்ட் சிகரத்தில் உள்ள தங்கும் முகாமிற்கு சென்று திரும்பியிருக்கிறார். தற்போது 45 வயதில் சிக்ஸ் பேக் வைத்து இருக்கும் சூப்பர் வுமன் தென்னிந்திய திரையுலகப் பிரபலங்களையே அலற வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் கவனிக்கத் தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.