close
Choose your channels

ஜோதிகா-நயன்தாரா படங்களை பாராட்டிய ஜிப்ரான்

Wednesday, January 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வளர்ந்து வரும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜிப்ரான், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் 'அறம்' படத்தின் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை சற்று முன் பார்த்தோம்'
இந்நிலையில் நயன்தாரா நடித்த 'அறம்' படமும், ஜோதிகா நடித்துள்ள 'மகளிர் மட்டும்' படமும் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளதாக ஜிப்ரான் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
முழுமையாக எடிட் செய்யப்படாத 'அறம்', 'மகளிர் மட்டும்' ஆகிய இரண்டு படங்களை சமீபத்தில் பார்த்ததாகவும், இரண்டு படங்களுமே பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரண்டு படங்களுக்கும் ஜிப்ரான் தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.