close
Choose your channels

விஜய் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி

Sunday, August 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் பட்டையை கிளப்பி வருகின்றன.

இந்த நிலையில் விஜய் ரசிகர்களுக்கு நல்ல செய்தி ஒன்றை மெர்சல் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இரண்டு சிங்கிள் பாடல்கள், இசை வெளியீடு ஆகியவற்றை தொடர்ந்து 'மெர்சல்' தீம் பாடல் ஒன்றை வெகுவிரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த தீம் பாடல் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

விஜய் நடிக்கும் படங்களில் தீம் பாடல், ரிலீசுக்கு முன்பே வெளியாவது இதுதான் முதல்முறை. அதுமட்டுமின்றி 'மெர்சல்' படத்தின் டீசர் வெளியாகும் தேதியும் வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமான 'மெர்சல்' படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.