close
Choose your channels

கணவர் படப்பிடிப்பில் பிறந்த நாளை கொண்டாடிய பாடகி சைந்தவி

Wednesday, January 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜி.வி.பிரகாஷ்குமார் மனைவியும் கர்நாடக சங்கீத பாடகியுமான "சைந்தவி" இன்று தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு நமது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்;

பாடகி சைந்தவி ஷங்கரின் 'அந்நியன்' படத்தில் ரண்டக்க, 'தொட்டிஜெயா' படத்தில் அச்சுவெல்ல கரும்பே, 'அழகிய தமிழ் மகன்' படத்தில் கேளாமல் கையிலே, 'வரலாறு' படத்தில் இன்னிசை அலைபாயுதே, 'பையா' படத்தில் 'அடடா மழைடா', 'சுறா' படத்தில் 'தஞ்சாவூரு ஜில்லாக்காரி', மதராசபட்டினம் படத்தில் 'ஆருயிரே ஆருயிரே', மாப்பிளை படத்தில் 'ரெடி ரெடியா' மற்றும் 'ஒண்ணு ரெண்டு', தெய்வத்திருமகள் படத்தில் 'விழிகளில் ஒரு வானவில், 'மயக்கம் என்ன' படத்தில் பிறைதேடும்,  சுந்தரபாண்டியன் படத்தில் 'நெஞ்சுக்குள்ளே',  'தலைவா' படத்தில் 'யார் இந்த சாலையோரம், 'ராஜா ராணி' படத்தில் நீ யாரோ யாரோ, 'தெகிடி' படத்தில் விண்மீன் விதையில் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தில் 'என்னாச்சு ஏதாச்சு', 'சேதுபதி' படத்தில் 'ஹவா ஹவா;, 'தெறி' படத்தில் என் ஜீவன் போன்ற பல வெற்றி பாடல்களை பாடியுளார் பாடகி "சைந்தவி"

பாடகி சைந்தவியின் பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று  அவரது கணவர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'ஐங்கரன்' படப்பிடிப்பு தளத்தில் மிக 'பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் 'ஐங்கரன்' படத்தின் இயக்குனர் ரவிஅரசு மற்றும் 'அடங்காதே' படத்தின் இயக்குனர் சண்முகம் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.