close
Choose your channels

சக்க போடு போடு ராஜா படத்தில் இணைந்த ஹரிஷ் கல்யாண்

Thursday, November 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் 'சக்க போடு போடு ராஜா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது தெரிந்ததே. இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் சிம்பு, கம்போஸ் செய்த ஒரு பாடல் சமீபத்தில் வெளிவந்து பட்டையை கிளப்பியது. 

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் இன்னொரு பாடலை பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண் பாடவுள்ளார். இந்த தகவலை ஹரிஷ் கல்யாண் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும், சிம்புவை ஹரிஷ்கல்யாண் சந்தித்தது குறித்தும் அப்போது சிம்பு அவருக்கு ஒரு புத்தகத்தைப் பரிசளித்து அதில் கையெழுத்து போட்டு கொடுத்ததையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சிம்பு இசையில் ஹரிஷ் கல்யாண் பாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரிஷ் கல்யாண் ஒரு நல்ல பாடகர் மட்டுமின்றி நன்றாக கீபோர்டு வாசிக்க தெரிந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ஹரிஷ் கல்யாண், ரைசாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில் தற்போது அவருக்கு பாடல் பாடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது அவரது திரையுலக வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையே காட்டுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.