close
Choose your channels

விஜய்யை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம்

Saturday, March 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நெய்வேலியில் நடந்தது என்பது தெரிந்ததே. நெய்வேலியில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நாளில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் படப்பிடிப்பின் நினைவாக இரண்டு மரங்களை நட்டார்கள் என்று வெளிவந்த செய்தியை புகைப்படத்துடன் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த செய்தி உலகம் முழுவதும் வைரல் ஆன நிலையில் ஹாலிவுட்டின் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பில் டியூக் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் உள்பட படக்குழுவினர்களை பாராட்டியுள்ளார். இயற்கையை பாதுகாக்க மரம் நடுங்கள் வாழ்த்துக்கள் விஜய்’ என்று அவர் கூறியுள்ளார்

ஹாலிவுட் பிரபலம் ஒருவர் விஜய்யை பாராட்டி உள்ளதை விஜய் ரசிகர்கள் தற்போது இதுகுறித்த ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.