close
Choose your channels

'பிக்பாஸ்3'யில் நான் இல்லை: பிரபல நகைச்சுவை நடிகர் விளக்கம்

Friday, May 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வரும் ஜூன் மாதம் இந்த நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் ஒளிபரப்பப்படவுள்ளது. இதற்கான புரமோ படப்பிடிப்பில் கமல்ஹாசன் சமீபத்தில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நடிகைகள் சாந்தினி தமிழரசன், சுதா சந்திரன், லைலா ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் ரமேஷ் திலக் கலந்து கொள்வதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இந்த தகவலை நடிகர் ரமேஷ் திலக் மறுத்துள்ளார். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி வதந்தி என்று அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.