close
Choose your channels

கார்த்தியின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்கள்

Thursday, January 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் தற்போது அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கார்த்தியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

கார்த்தியின் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் ராஜாத் இயக்கவுள்ளார். மேலும் கார்த்தி ஜோடியாக 'தீரன் அதிகாரம் ஒன்று' நாயகி ரகுல் ப்ரித்திசிங் மீண்டும் ஜோடி சேருகிறார். ரொமான்ஸ் படமாக உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி உள்பட மற்ற தகவல்கள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.