இன்று ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பிய வருமான வரித்துறை: ஆஜரானாரா விஜய்?


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செல்வன் ஆகியோரது இல்லங்களில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர் என்பது தெரிந்ததே
இந்த சோதனையில் விஜய் வீட்டில் ஒரு ரூபாய் கூட கணக்கில் வராத பணம் கைப்பற்றப்படவில்லை என்ற தகவல் வந்தபோதிலும் ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் கோடிக்கணக்கில் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது
இந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்ய இன்று ஆஜராகுமாறு விஜய், ஏஜஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் அன்புச்செழியன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. எனவே மூவரும் இன்று ஆஜர் ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது
இந்த நிலையில் விஜய் என்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக வில்லை என்றும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் கால அவகாசம் கேட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.