close
Choose your channels

'இந்தியன் 2' இன்று முதல் தொடக்கம் 

Monday, November 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ள 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் இந்த படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இதற்கான பூஜை இன்று நடந்தது. இந்த பூஜையில் படக்குழுவினர் சிலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் கமல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது. இந்த படத்தின் கலை இயக்குனராக டி.முத்துராஜ் பணி  புரியவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு மாதத்தில் செட் அமைக்கும் பணி  முடிந்துவிடும் என்றும் அதன் பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.