close
Choose your channels

'தளபதி 63' படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்!

Thursday, March 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் டேனியல் பாலாஜி வில்லனாக நடித்து வந்தாலும் இன்னொரு மெயின் வில்லன் விரைவில் படத்தில் இணைவார் என்று கூறப்பட்டது

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகரும், 'ஆரண்ய காண்டம்' , 'மாயவன்' போன்ற படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தவருமான ஜாக்கி ஷெராப், தளபதி 63' படத்தில் இணைந்துள்ளார். இந்த தகவலை ஏஜிஎஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது

பொதுவாக ஒரு படத்தில் வலுவான வில்லன் இருந்தாலே அந்த படத்தின் வெற்றி உறுதியாகிவிடும். அந்த வகையில் ஜாக்கி ஷெராப், விஜய்க்கு சவால் விடும் வகையில் நடிப்பவர் என்பதால் இந்த படத்தின் வெற்றியும் உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.