close
Choose your channels

ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு: நாயகி இவர்தான்!

Friday, September 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் கல்யாண் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம்ரவி நடித்த ’பூலோகம்’ என்ற படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ரவியின் 28வது படமான இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது என்பதும் இந்த பூஜையில் படக்குழுவினர்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஜெயம் ரவி ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க இருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார் என்பதும், மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவி ஏற்கனவே மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் தனது பகுதியின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்தார் என்பது தெரிந்ததே. இதன் பிறகு நீண்ட காலமாக வைத்திருந்த ஹேர்ஸ்டைலை தற்போது மாற்றி உள்ளார் என்பதும் இந்த படத்தின் பூஜை குறித்த புகைப்படங்களில் அவர் மீண்டும் பழைய ஹேர்ஸ்டைலில் தோன்றுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.