close
Choose your channels

வரும் வெள்ளியன்று ரிலீஸ் ஆகும் ஜெயம் ரவி படம்: திடீர் ஆச்சரியம்

Monday, June 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் வெள்ளியன்று அதாவது ஜூன் 21ஆம் தேதி விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்', 'தனுஷின் 'பக்கிரி' மற்றும் 'தும்பா' ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் ஜெயம் ரவி ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் செய்தியாக வரும் வெள்ளியன்று ஜெயம் ரவியை திரையில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

ஆம், வரும் வெள்ளியன்று வெளியாகும் படங்களில் ஒன்றாகிய 'தும்பா' படத்தில் ஜெயம் ரவி சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இத்தனை நாள் இந்த விஷயத்தை சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்ததாகவும், தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தர்ஷன், கீர்த்தி பாண்டியன் 'கலக்க போவது யாரு' புகழ் தீனா உள்பட பலர் நடித்துள்ள 'தும்பா' படத்தை ஹரிஷ் ராம் இயக்கியுள்ளார். நரேன் இளன் ஒளிப்பதிவில், கலைவாணன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாள மற்றும் இந்தியில் தயாராகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் 'புலி' ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.