close
Choose your channels

சமந்தாவின் 'ஓபேபி' ரீமேக்கில் பிரபல நடிகை!

Saturday, July 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமந்தாவின் 'ஓபேபி' திரைப்படம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமந்தாவின் நடிப்புக்கு விமர்சகர்கள் மற்றும் ஊடகங்கள் பெரும் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஒருபுறம் இந்த படத்தின் ரீமேக்கில் ராணா மற்றும் அலியாபட் நடிக்கவுள்ளதாகவும், இன்னொரு புறம் இந்த படத்தை இந்தியில் போனிகபூர் தயாரிக்க அவரது மகள் ஜான்வி கபூர், சமந்தாவின் வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. விரைவில் இந்த படத்தின் ரீமேக்கில் நடிப்பது யார்? என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் தெரிய வரும்

ஓ பேபி' திரைப்படம் கொரிய மொழியில் வந்த 'மிஸ் கிரானி' என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.