close
Choose your channels

ஜூலை 28ஆம் தேதி விடுமுறை என அறிவிப்பு: 'தி லெஜண்ட்' திரைப்படத்திற்கு அடித்த அதிர்ஷ்டம்!

Tuesday, July 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் நடித்த ’தி லெஜண்ட்’ என்ற திரைப்படம் ஜூலை 28-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட புரமோஷன் பணிகளை படக்குழுவினர் கவனித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ‘தி லெஜண்ட்’ ரிலீஸாகும் ஜூலை 28 அன்று சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளதால் இந்த படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெற உள்ளது. இதனை அடுத்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஜூலை 28ஆம் தேதி அரசு அலுவலகங்கள், மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விடுமுறை அதே தினத்தில் ரிலீசாகும் ‘தி லெஜண்ட்’ படத்திற்கு கிடைத்த அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.