close
Choose your channels

ஜோதிகாவின் 'காற்றின் மொழி' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Friday, August 24, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜோதிகா நடிப்பில் பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காற்றின் மொழி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வரும் அக்டோபர் 18ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் சற்றுமுன் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாலிவுட்டில் பிரபல நடிகை வித்யாபாலன் நடித்த 'துமாரி சூளு' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாசிப் இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் ப்ரவீண் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை தனஞ்செயன் தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.