close
Choose your channels

கலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த படத்தை இயக்கும் சூர்யா பட இயக்குனர்

Thursday, September 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தற்போது விக்ரம்பிரபு நடித்து வரும் 'துப்பாக்கி முனை' என்ற படத்தை தயாரித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் தயாரிக்கவுள்ள இன்னொரு படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

தாணு அவர்கள் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு 'ஹிப்பி' என்ற டைட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் டி.என்.கிருஷ்ணா இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சூர்யா, ஜோதிகா நடித்த 'சில்லுன்னு ஒரு காதல்' மற்றும் நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சமீபத்தில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'ஆர்.எக்ஸ்100' என்ற படத்தில் நடித்த கார்த்திகேயா ஹீரோவாக நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகவுள்ளது. இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்கவுள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில், பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.