close
Choose your channels

கலகலப்புடன் தொடங்கிய 'கலகலப்பு 2' ஓப்பனிங் வசூல்

Monday, February 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான 'கலகலப்பு 2' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. முழுக்க முழுக்க காமெடி காட்சிகள் கொண்ட இந்த படத்தை ரசிகர்கள் குடும்பத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல்வாரயிறுதி ஓப்பனிங் வசூல் குறித்த தகவலை பார்ப்போம். சென்னையில் இந்த படம் 21 திரையரங்க வளாகங்களில் 292 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,59,18,185 வசூலாகியுள்ளது. மேலும் திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் இருந்ததால் இந்த படம் இந்த ஆண்டின் வெற்றிப்பட பட்டியலிலும் இணைந்துள்ளது.

மிகச்சிறந்த ஓப்பனிங் வசூலை கொடுத்துள்ள இந்த படம் தொடர்ந்து வசூலை குவித்து முதல் பாக வசூல் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.