close
Choose your channels

மீண்டும் ஆயுதத்தை கையில் எடுக்கும் விஜய்-முருகதாஸ் படக்குழு?

Saturday, December 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டில் 'கலப்பை' என்ற ஒரு வதந்தி கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் 'கலப்பை' என்ற டைட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி முற்றிலும் வதந்தியே என்றும், தற்போது படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டு வருவதாகவும், திரைக்கதை பணி முடிந்தவுடன் மட்டுமே டைட்டில் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்திற்கு ஏதாவது ஒரு ஆயுதத்தின் பெயரிலான டைட்டில் தான் வைக்கப்படும் என்று இயக்குனருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே விஜய்-முருகதாஸ் கூட்டணி இணைந்த இரு படங்களுக்கும் துப்பாக்கி, கத்தி என ஆயுதங்கள் பெயர்கள் தான் டைட்டிலாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.