close
Choose your channels

கமல்ஹாசனின் 'விக்ரம்' ரிலீஸ் தேதி இதுவா?

Wednesday, February 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் என தெரிகிறது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார் என்பதும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது ஏப்ரல் 29-ஆம் தேதி இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏப்ரல் 14ஆம் தேதி தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இரண்டு வாரம் கழித்து கமல்ஹாசனின் ‘விக்ரம்’ வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.