close
Choose your channels

திட்டமிட்ட தேதிக்கு முன்னரே ரிலீஸ் ஆகும் 'காஞ்சனா 3'

Thursday, February 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா 3' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு விருந்தாக ஏப்ரல் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் இந்த படம் திட்டமிட்ட தேதிக்கு முன்னரே ரிலீஸ் ஆகலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதாவது ஏப்ரல் 18க்கு பதிலாக ஒரு வாரம் முன்னரே ஏப்ரல் 12ஆம் தேதி இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, கோவை சரளா, கபீர்சிங், மனோபாலா, ஸ்ரீமான், தேவதர்ஷினி, சத்யராஜ், கிஷோர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் இந்த ஆண்டின் மிக எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.