close
Choose your channels

'தலைவி' ரிலீஸ் தேதி: கங்கனா ரனாவத் வெளியிட்ட வீடியோ வைரல்!

Thursday, February 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாள் நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட ’தலைவி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை நடிகை கங்கனா ரனாவத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்த வீடியோ ஒன்றை அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த பதிவில் அவர் ’தலைவி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமியும் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத் நடித்துள்ள இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் கருணாநிதி கேரக்டரில் பிரகாஷ்ராஜ், சோபன்பாபு கேரக்டரில் ஜிஷ்ஷூ செங்குப்தா, சசிகலா கேரக்டரில் பூர்ணா, ஜானகி ராமச்சந்திரன் கேரக்டரில் மது, ஜெயலலிதாவின் தாயார் சந்தியா கேரக்டரில் பாக்யஸ்ரீ, ஆர்.எம்.வீரப்பன் கேரக்டரில் சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

விஜயேந்திர பிரச்சாத் திரைக்கதையில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிய இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.