close
Choose your channels

உதிரம் உள்ள கைகளுடன் உதிரன்..  செம்ம அப்டேட்டுடன் 'கங்குவா' புதிய போஸ்டர்..!

Friday, January 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை எட்டி உள்ள நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டு செம அப்டேட் ஒன்றையும் கூறியுள்ளனர்.

நடிகர் சூர்யா 10 கெட்டப்புகளில் நடித்துவரும் திரைப்படம் ‘கங்குவா’. இந்த படம் தமிழ் உட்பட 10 மொழிகளில் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதாகவும் சூர்யாவின் திரையுலக வாழ்வில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டு நாளை காலை 11 மணிக்கு உதிரன் என்ற கேரக்டரின் போஸ்டர் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். மேலும் உதிரம் உள்ள கைகளுடன் உதிரன் இருக்கும் போஸ்டரையும் வெளியிட்ட நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.