close
Choose your channels

கார்த்திக் சுப்புராஜின் விக்ரம்-துருவ் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

Saturday, December 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் முடிவடைந்துள்ள தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது அடுத்த படத்தில் சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை செவன் க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி முதல் தொடங்க இருப்பதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

விக்ரம் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் முடிவடைய உள்ளதாகவும் இதனை அடுத்து விக்ரமின் 60வது படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் பிப்ரவரி முதல் தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் விக்ரம் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.