close
Choose your channels

ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகும் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படம்

Wednesday, May 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பேட்ட’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அவர் இயக்கிய தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கொரோனா பிரச்சனை முடிந்தபின்னர் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனமான ‘ஸ்டோன்பெஞ்ச் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ‘மேயாத மான்’ திரைப்படம் மற்றும் ஒருசில படங்கள் உருவாகிய நிலையில் தற்போது வெப்சீரீஸ் ஒன்று உருவாகி வருகிறது.

ஜெய் மற்றும் ‘ஓ மை கடவுளே’ புகழ் வாணிபோஜன் நடித்துள்ள இந்த வெப்சீரீஸை கார்த்திக் சுப்புராஜின் உதவியாளர் சாருகேஷ் இயக்கியுள்ளார். இந்த வெப்சீரீஸ் விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த வெப்சீரீஸின் ரிலீசை திரையுலக ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.