close
Choose your channels

தர்ஷனுடன் சபரிமலை யாத்திரை: கவின் வெளியிட்ட புகைப்படங்கள்!

Wednesday, December 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகருமான கவின் தற்போது சபரிமலை யாத்திரை சென்று உள்ள நிலையில் அது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

’நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கவின். அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலம் ஆனார் என்பதும் சமீபத்தில் அவர் நடித்த ’லிப்ட்’ என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கவின் மற்றும் ‘கனா’ நடிகர் தர்ஷன் ஆகியோர் சபரிமலை யாத்திரை சென்று உள்ளனர். இது குறித்த புகைப்படங்களை கவின் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.