close
Choose your channels

கீர்த்திசுரேஷின் 20வது படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

Friday, January 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2015ஆம் ஆண்டு விஜய் இயக்கிய 'இது என்ன மாயம்' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் மூன்றே ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விக்ரம், விஷால் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள கீர்த்திசுரேஷுக்கு ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா, சாமி 2, சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் நல்ல பெயரை பெற்று தந்தது. குறிப்பாக 'நடிகையர் திலகம்' திரைப்படம் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.

இந்த நிலையில் கீர்த்திசுரேஷின் 20வது படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த தெலுங்கு படத்தில் கல்யாண் ராமுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கவுள்ளார். இந்த படத்தை நரேந்திரநாத் இயக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.