close
Choose your channels

வைரலாகும் கே.எஸ்.ரவிகுமாரின் மகள்கள் புகைப்படம்!

Thursday, April 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் நேற்று முன்தினம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் வாக்களிக்க திரையுலக பிரபலங்கள் பலர் குவிந்தனர் என்பதும் தெரிந்ததே. ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றினார்கள் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யாவின் படங்கள் உட்பட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் அவர்களும் நேற்று தனது மனைவி மற்றும் மகள்களுடன் வாக்களிக்க வந்தார். வாக்களித்தவுடன் குடும்பத்துடன் அவர் ஊடகங்களுக்கு கொடுத்த போஸ் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த பிறகுதான் கேஎஸ் ரவிக்குமாருக்கு இவ்வளவு பெரிய மகள்களா இருக்கிறார்கள்? என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமென்ட் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.