close
Choose your channels

வருங்கால ஃபுட்பால் பிளேயர் குட்டித்தல ஆத்விக்.. வித்தியாசமான பிறந்தநாள் கொண்டாட்டம்.!

Tuesday, March 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் ஒரு திரைப்பட நடிகர் மட்டுமின்றி பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் ஆகியவற்றில் கலந்து கொள்வதில் விருப்பம் உள்ளவர் என்ற நிலையில் அவரது மகன் ஆத்விக் ஃபுட்பால் விளையாட்டில் விருப்பமுள்ளவர் என்பது தெரிந்தது.

அந்த வகையில் அவரது பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் ஃபுட்பால் பிளேயர்கள் புகைப்படங்கள் பின்னணியில் கால்பந்து வடிவில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான அஜித் - ஷாலினி தம்பதிகளின் மகன் ஆத்விக் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் குறித்த புகைப்படங்களை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதில் உலகப் புகழ்பெற்ற ஃபுட்பால் பிளேயர்களின் புகைப்படங்கள் பின்னணியில் ஃபுட்பால் வடிவில் அமைக்கப்பட்ட பிறந்தநாள் கேக்கை வெட்டி ஆத்விக் கொண்டாடியுள்ளார். மேலும் அவர் புட்பால் பிளேயரின் ஜெர்சி அணிந்து தான் இந்த கேக்கை வெட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித், ஷாலினி மற்றும் அனோஷ்கா ஆகிய குடும்ப உறுப்பினர்களுடன் ஆத்விக் பிறந்த நாள் கொண்டாடிய இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தற்போது ஆத்விக் 9 வயதில் உள்ள நிலையில் அவர் கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார் என்பதும் குறிப்பாக எப்சி என்னும் கால்பந்து கிளம்பிற்காக அவர் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.