close
Choose your channels

திடீரென மும்பை விசிட் செய்யும் நயன்தாரா? எதற்கு தெரியுமா?

Wednesday, March 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஏப்ரல் முதல் வாரம் மும்பை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .

விஜய்சேதுபதியுடன் நயன்தாரா நடித்து முடித்துள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் சிரஞ்சீவியுடன் நயன்தாரா நடித்த 'காட்பாதர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.

இந்த நிலையில் தமிழ் மலையாளத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் நயன்தாரா ஷாருக்கான் மற்றும் அட்லி இணைந்த ‘லயன்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும், ஏற்கனவே இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ஏப்ரல் முதல் வாரத்தில் நயன்தாரா மும்பை செல்ல இருப்பதாகவும், ஷாருக்கானுடன் நயன்தாரா நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பை அட்லி நடத்தவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.