close
Choose your channels

பிரபாஸ் அடுத்த படத்தை இயக்குவது விஜய்யின் சூப்பர்ஹிட் பட இயக்குனரா?

Monday, April 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் தான் பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை அளித்துள்ளது

தளபதி விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் ’விக்ரம்’ படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ‘மாஸ்டர்’ படத்தின் தெலுங்கு புரமோஷன் நிகழ்ச்சிக்காக ஐதராபாத் சென்றபோது பிரபாஸை லோகேஷ் கனகராஜ் சந்தித்ததாகவும் அப்போது லோகேஷ் கூறிய கதை பிரபாஸ்க்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் இதனையடுத்து இருவரும் அவ்வப்போது டச்சில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

பிரபாஸ் தற்போது ராதே ஷ்யாம், சலார் மற்றும் ஆதிபுருஷ் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருவரும் தங்களுடைய படங்களை முடித்தபின்னர் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் தமிழ் தெலுங்கு உட்பட பான் - இந்தியா படமாக இருக்கும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.