close
Choose your channels

'மாரி 2' படத்திற்காக தர லோக்கலாக மாறும் 'மலர்' டீச்சர்

Wednesday, November 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சாய்பல்லவி என்றாலே அவரது மலர் டீச்சர் கேரக்டர் நிச்சயம் நம் கண்முன் வரும். அந்த அளவுக்கு ஒரு இயல்பான கேரக்டரில் 'பிரேமம்' படத்தில் நடித்து தென்னிந்தியா முழுவதும் பெரும் அளவில் ரசிகர்களை பெற்றவர் சாய்பல்லவி.

இந்த நிலையில் தற்போது சாய்பல்லவி, தனுஷின் 'மாரி 2' படத்தின் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட்லுக்கில் இந்த படம் வரும் டிசம்பரில் வெளியாகவுள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு சாய்பல்லவின் தரலோக்கல் கேரக்டர் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு 'மாரி 2' ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சரியாக 6 மணிக்கு சாய்பல்லவியின் தரலோக்கல் கேரக்டர் என்ன என்பதை பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.