close
Choose your channels

மகத்-ஐஸ்வர்யா ஜோடிக்கு இன்று முதல் புதிய தொடக்கம்

Friday, December 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் மகத் மற்றும் நடிகை ஐஸ்வர்யா இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. பூஜையுடன் இன்று முதல் இந்த படத்தின் படப்ப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், மகத் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருக்குமே இன்று முதல் ஒரு நல்ல தொடக்கம் திரையுலகில் ஆரம்பித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ரொமான்ஸ் காமெடி படமாக உருவாகவுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரபுராம் இயக்கவுள்ளார். மகத் இந்த படத்தில் வடசென்னை இளைஞராகவும், அவர் காதலிக்கும் பெண்ணாக ஐஸ்வர்யாவும் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.