close
Choose your channels

மலாலாவிற்கு திருமணம்… கணவர் யார் தெரியுமா?

Wednesday, November 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெண்கல்விக்காக குரல் கொடுத்த மலாலா யூசுப்சாய் கடந்த 2012 ஆம் ஆண்டு தாலிபான்களால் சுடப்பட்டார். இதனால் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்த அவர் தற்போது பிரிட்டன் நாட்டில் அடைக்கலம் பெற்று வாழ்ந்து வருகிறார். மேலும் தொடர்ந்து பெண்களின் கல்விக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் தனது உரத்தக் கருத்துகளை பகிர்ந்து கொண்டு வரும் அவர் தற்போது அசர் மாலிக் என்பவரை திருமணம் செய்துகொண்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

பாகிஸ்தானில் தாலிபான்களின் ஆதிக்கம் அதிகமிருந்தபோது 15 வயதிலேயே பெண்களின் கல்விக்காக குரல் கொடுத்தவர் மலாலா யூசுப்சாய். தொடர்ந்து கட்டுரைகள், துண்டு பிரசுரங்கள் போன்றவற்றை கொடுத்ததால் தாலிபான்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு அவரை பள்ளி வாகனத்தில் வைத்தே சுட்டனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் லண்டனில் சிகிச்சை பெற்ற அவர் முழுவதும் குணமடைந்து பிரிட்டனிலேயே தங்கிவிட்டார்.

அதைத்தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்காகவும் பெண்களின் கல்விக்காகவும் பல முற்போக்கான கருத்துகளை பேசிவருகிறார். இதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை தட்டிச்சென்றார். இதனால் உலகிலேயே மிக இளம் வயதில் நோபல் பரிசு பெறும் முதல் நபர் என்ற பெருமை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது 24 வயதாகும் மலாலா தொழிலதிபரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பொது மேலாளராகவும் இருந்துவரும் அசர் மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். பிரிட்டனில் உள்ள பர்மிங்ஹாமில் இருக்கும் வீட்டில் தங்களுடைய திருமணம் எளிய முறையில் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மலாலாவின் கணவர் அசர் மாலிக் விளையாட்டு துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதும் அவர் முல்தான் சுல்தான்களுக்கான தொழில்முறை டி20 கிரிக்கெட் அணியை வடிவமைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இதையடுத்து தற்போது மலாலா மற்றும் அசர் மாலிக் தம்பதிகளுக்கு பிரபலங்கள், சமூகநல ஆர்வலர்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.