close
Choose your channels

பைக்கில் சைலன்ஸர் வச்சி சவுண்டா? ஒட்டு மொத்தத்தையும் நொறுக்கிய வைரல் வீடியோ!

Saturday, February 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இரு சக்கர வாகனம் ஓட்டும் இளைஞர்கள் பலர் எக்ஸ்ட்ரா-சைலன்ஸர் வச்சி கூடுதல் சத்தத்துடன் வாகனம் ஓட்டி வருகின்றனர். இது இளசுகள் மத்தியில் பேஷனாக இருந்தாலும் சாலையில் செல்லும் பலருக்கு தொந்தரவாகவே இருக்கிறது. இந்த சைலன்ஸர் சத்தத்தால் சில நேரங்களில் பின்னால் வரும் வாகனங்களை தெரிந்து கொள்ள முடியாத நிலையும் ஏற்படுகிறது.

இந்நிலையில் கூடுதல் சத்தத்துடன் வாகனங்களை ஓட்டக் கூடாது என போக்குவரத்துக் காவல் துறையினர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். ஆனால் இந்த எச்சரிக்கை மட்டும் பத்தாது என கர்நாடக மாநிலத்தின் மணிபால் பகுதியில் பணியாற்றிவரும் காவலர்கள் ஒரு அதிரடி முடிவையும் எடுத்து இருக்கின்றனர். அதன்படி மணிபால் நகரப் பகுதியில் கூடுதல் சத்தத்துடன் இயங்கிய பல சைலன்ஸர்களை பறிமுதல் செய்து உள்ளனர்.

மேலும் இப்படி பறிமுதல் செய்யப்பட்ட சைலன்ஸர்களை நடு ரோட்டில் வைத்து அதை ரோடு ரோலர் வாகனம் கொண்டு அடித்து நொறுக்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பல இளசுகள் கஷ்டப்பட்டு வாங்கிய சைலன்ஸர் இப்படி வீணாப்பேச்சே என கண்ணீர் மல்க வருத்தம் தெரிவித்தும் வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.