close
Choose your channels

'மாஸ்டர்' பட அப்டேட்: லோடிங் ஆகிக் கொண்டிருக்கும் அனிருத்தின் 'சம்பவம்'

Tuesday, February 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் இந்த படத்தின் புரமோஷன் பணிகளையும் படக் குழுவினர் செய்து வருகின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் மூன்று லுக் போஸ்டர்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அடுத்த கட்டமாக மாஸ்டர் படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அனிருத் இசையில் அனிருத் பாடிய ’சம்பவம்’ என்ற பாடல் தற்போது லோடிங் ஆகி வருவதாகவும் இந்த பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த செய்தியை விஜய் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

மாஸ்டர் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரையிடப்பட உள்ளதால் இந்த படத்தின் சிங்கிள் பாடல் மட்டுமின்றி டீசர் மற்றும் டிரைலர் மிக விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.