close
Choose your channels

சிரஞ்சீவி உறவினருக்கு திருமணம்.. மணப்பெண்ணும் ஒரு நடிகை தான்!

Monday, August 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் உறவினரும் நடிகருமான பவன் தேஜ் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் நெருங்கிய உறவினரும் நடிகருமான பவன் தேஜ், தன்னுடன் நடித்த நடிகை மேகன்னாவை திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளார். சமீபத்தில் நடந்த இந்த திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பவன் தேஜ் மற்றும் மேகன்னா ஆகிய இருவரும் கடந்த ஆண்டு வெளியான Ee Kathalo Paathralu Kalpitam என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதனையடுத்து சில மாதங்களில் இருதரப்பு பெற்றோர்களின் சம்மதம் பெற்று தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

விரைவில் மணமக்கள் ஆகப்போகும் பவன் தேஜ் மற்றும் மேகன்னாவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திருமண தேதி இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் இருப்பினும் விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் சிரஞ்சீவியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பவன் தேஜ் - மேகன்னா திருமண நிச்சயதார்த்தத்தில் சிரஞ்சீவி, ராம்சரண் தேஜா உள்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிரஞ்சீவி நடித்த ’ஆச்சார்யா’ திரைப்படத்தில் பவன் தேஜ் ஒரு சிறு கேரக்டரில் நடித்து இருந்தார் என்பதும் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.