close
Choose your channels

கதவை மூடிக்கிட்டு இருக்குற பொண்ணு என்ன பண்றான்னு பேரண்ட்ஸ் கவனிக்கணும்: 'பகாசூரன்' டீசர்

Sunday, August 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் உருவான ’பகாசூரன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு பக்கம் செல்வராகவன் கொடூரமாக கொலைகளை அடுத்தடுத்து செய்து வருவதும், இன்னொரு பக்கம் தொடர் கொலைகளை விசாரணை செய்து காவல்துறை அதிகாரியான நட்டி நட்ராஜ், அந்த கொலைகளை செய்தது யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருப்பதுமான காட்சிகள் இந்த டீசரில் உள்ளன.

செல்வராகவன் கொலைகளை ஏன் செய்கிறார்? செல்வராகவனை நட்டி நட்ராஜ் கண்டுபிடித்தாரா? என்பதுதான் இந்த படத்தின் கிளைமாக்ஸ் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு வீட்டிலும் தன்னுடைய பெண் அல்லது பையன் கதவை பூட்டி கொண்டு என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கவனித்தால் தான் நாட்டில் குற்றம் குறையும் என்று நட்டி பேசும் வசனத்தில் இருந்து இந்த படத்தின் கதையை ஓரளவு யூகிக்க முடிகிறது .

செல்வராகவன், நட்டி நட்ராஜ், ராதாரவி, தேவதர்ஷினி, தேனப்பன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.