close
Choose your channels

மணி ஹெய்ஸ்ட் சீசன் 5: எகிற வைத்த எதிர்பார்ப்பு பூர்த்தி செய்ததா?

Saturday, September 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த மணி ஹெய்ஸ்ட் ஐந்தாவது சீசன் நேற்று வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை பார்ப்போம்

நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கும் மணி ஹெய்ஸ்ட் 5வது சீசனின் முதல் பாகம் நேற்று வெளியாகி உள்ளது. இதில் ஐந்து எபிசோடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முந்தைய பாகங்களில் ஸ்பெயின் வங்கியில் பணத்தை அச்சடித்து கொள்ளை அடிப்பது, புரபொசரின் முக்கிய கூட்டாளியான நைரோபியின் மறைவு, புரபொசரின் காதலி வங்கிக்குள் நுழைதல், வங்கி கொள்ளை வழக்கை கவனித்துக் கொண்டிருந்த அலிசியா, புரபொசரின் இடத்தை கண்டுபிடித்து அவரை துப்பாக்கி முனையில் மிரட்டுவது ஆகியவற்றைப் பார்த்தோம்

இந்த நிலையில் நைரோபியின் மரணத்திற்கு பிறகு டோக்கியோ மற்றும் லிஸ்பான் வழிகாட்டுதலில் கொள்ளை தொடர்கிறது. அலிசியாவிடம் புரபொசர் மாட்டி கொண்ட நிலையில் புரபொசரின் தலைமை இல்லாமல் இக்கட்டான சூழ்நிலையில் கொள்ளையர்கள் இருக்கும்போது, கொள்ளையர்களை பிடிப்பதற்காக ராணுவம் வங்கிக்குள் நுழைகிறது என்பதும் கொள்ளையர்கள் ராணுவத்தை சமாளித்தார்களா? அலிசியாவிடம் இருந்து புரபொசர் தப்பித்தாரா? போன்ற கேள்விகளுக்கு இந்த சீசனில் விடை உள்ளது.

இந்தத் தொடரின் முக்கிய கேரக்டரில் ஒன்றான பெர்லினின் மகன் அறிமுகமாக இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பதும் அடுத்து வரவிருக்கும் இரண்டாம் பாகத்தில் பெர்லின் மகனுக்கு கதையில் முக்கியத்துவம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

மணி ஹெய்ஸ்ட் தொடரின் முக்கிய அம்சமே புரபொசரின் புத்திசாலித்தனமான செயல்பாடு, இக்கட்டான நிலையிலும் பதட்டமடையாமல் அதில் இருந்து மீண்டு வருவது, புதுப்புது உத்திகளை கடைபிடிப்பது ஆகியவைதான். ஆனால் இந்த பாகத்தில் அலிசியாவிடம் புரபொசர் மாட்டி கொண்டு அதில் இருந்து தப்பிக்க முயற்சி செய்வதிலேயே பாதி நேரம் ஓடிவிடுகிறது. இதனால் கொள்ளையர்கள் தலைவன் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

அதேபோல் ராணுவ அதிகாரிகள் ஏற்கனவே மனித உரிமை மீறலை நிகழ்த்தியவர்கள் என்றும் ராணுவத்தால் தண்டனை பெற்றவர்கள் என்றும் காட்டப்பட்டுள்ளது, இத்தாலிய பாசிச எதிர்ப்பு பாடல், பொருளாதார சிஸ்டம் ஆகியவை ஸ்பெயின் மக்களின் உள்ளூர் பிரச்சனையாக கருதப்படுகிறது.

இருப்பினும் இந்த சீசனில் ஆக்ஷன் மற்றும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பெர்லின் தனது மகனுடன் நடத்தும் ஹெய்ஸ்ட், டோக்கியோவின் மனமாற்றம் ஆகியவை ரசிக்கும் வகையில் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் கொள்ளையடிக்கும் குழுவினர்கள் ஒரு முக்கிய கேரக்டரை இழப்பதோடு இந்த பாகம் முடிவடைகிறது. அடுத்த பாகத்தில் கொள்ளையர்களின் நோக்கம் நிறைவேறியதா? கொள்ளையர்களை பிடிக்க அலிசியா போடும் திட்டங்கள் என்ன? புரபொசர் அடுத்து நிகழ்த்தப் போகும் மாயாஜாலம் என்ன? போன்ற வினாக்களுக்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பல மாதங்களாக ஐந்தாவது சீசனுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு பாகம் ஒன்று கண்டிப்பாக ஒரு திருப்தியான தொடராக தான் இருந்திருக்கும். இருப்பினும் இந்த தொடரின் முடிவை காண டிசம்பர் வரை பொருத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் ஒருசில குழப்பங்கள் இருந்தாலும் இதயத்தை தொடும் கேரக்டர்களால் பார்வையாளர்களுக்கு முழு திருப்தியே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.