close
Choose your channels

ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார்?

Thursday, November 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ’எல்.கே.ஜி’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் வசூல் அளவிலும் விமர்சனங்கள் அளவிலும் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது அடுத்த படத்திற்காக ஆர் ஜே பாலாஜி தயாராகியுள்ளார்.

ஆர் ஜே பாலாஜி முக்கிய வேடத்தில் நடிக்கும் ஒரு திரைப்படத்திற்கு ‘மூக்குத்தி அம்மன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தையும் எல்.கே.ஜி. திரைப்படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்க உள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் இந்த படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கேரக்டரில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே நயன்தாராவும் ஆர் ஜே பாலாஜிவ்யும், ’வேலைக்காரன்’ மற்றும் ’நானும் ரவுடிதான்’ போன்ற படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா தற்போது ரஜினியின் 'தர்பார்’ மற்றும் மற்றும் மிலிந்த் ராவ் இயக்கும் 'நெற்றிக்கண்'ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.