close
Choose your channels

காதலருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாரான நயன்தாரா

Monday, December 24, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இந்த ஆண்டு அவரது திரையுலக வாழ்க்கையில் வெற்றிகரமான ஆண்டு என்றே சொல்ல வேண்டும். இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான 'கோலமாவு கோகிலா' மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட். அதேபோல் நீண்ட இடைவெளிக்கு பின் அஜித்துடன் 'விஸ்வாசம்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அந்த படமும் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் நாளை கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு நயன்தாரா, இந்த நாளை கொண்டாட தயாராகிவிட்டார். கிறிஸ்துமஸ் அலங்காரத்துடன் காதலர் விக்னேஷ் சிவனுடன் உள்ள நயன்தாராவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்த கிறிஸ்துமஸ் திருநாளுக்குள் அவர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ரசிகர்களின் கோரிக்கையை நயன்தாரா நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.