close
Choose your channels

நயன்தாராவின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

Saturday, December 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

குறிப்பாக அஜித்துடன் 'விஸ்வாசம்', விஜய்யுடன் 'தளபதி 63', சிரஞ்சீவியுடன் 'சைரா நரசிம்மரெட்டி', நிவின்பாலியுடன் 'லவ் ஆக்சன் டிராமா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களான 'ஐரா', 'கொலையுதிர்க்காலம்', போன்ற படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சிரஞ்சீவி நடிக்கவுள்ள 152வது படத்தை கொரட்டலா சிவா இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்திலும் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் மிகவிரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.