close
Choose your channels

சிவாஜி, கமல் படங்களுக்கு பின் ஜெயம் ரவி படத்தில் புதுமை

Saturday, December 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவை பொருத்தவரை ஒரு படத்திற்கு பாடல்கள் மிக முக்கியம். ஒரு படத்தின் பாடல்கள் நல்ல வெற்றி பெற்றிவிட்டால் அந்த படம் பாதி வெற்றி பெற்ற மாதிரி என்று கோலிவுட்டில் கூறுவதுண்டு. ஆனாலும் சிவாஜி கணேசனின் 'அந்த நாள்', கமல்ஹாசனின் 'பேசும் படம்' போன்ற ஒருசில படங்கள் ஒரு தனி முயற்சியாக பாடல்களே இல்லாமல் வெளிவந்து வெற்றி பெற்றதுண்டு.

இந்த நிலையில் ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் பாடல்களே இல்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. ஒரே படத்தில் பல கெட்டப்புகளுடன் ஜெயம் ரவி தோன்றும் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி படம் என்று கூறப்படுகிறது.

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கேஎஸ் ரவிகுமார், யோகிபாபு, பொன்னம்பல்ம் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஜெயம் ரவி நடித்துள்ள 'அடங்கமறு' திரைப்படம் வரும் 21ஆம் தேதி வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.