close
Choose your channels

சிம்புவுடன் வருகிறாரா ஓவியா? அல்டிமேட் நிகழ்ச்சி குறித்து ஒரு அசத்தல் தகவல்!

Thursday, February 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து சமீபத்தில் கமல்ஹாசன் விலகியதை அடுத்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது சிம்பு என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் சில மணி நேரங்களுக்கு முன்னர் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது குறித்த புரமோ வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் சிம்புவை அடுத்து இந்த நிகழ்ச்சியில் வைல்ட்கார்டு எண்ட்ரியாக நடிகை ஓவியாவும் வரப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஓவியாவுக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பது, தற்போது ஓவியா வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வந்தால் பிக்பாஸ் நிகழ்ச்சி களை கட்டும் என்றும் கூறப்படுகிறது.

சிம்புவுடன் ஓவியா வரும் சனிக்கிழமை அன்று வருவாரா? அல்லது ஞாயிறன்று வருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.