close
Choose your channels

விஜய் படத்துக்கு மட்டும் தான் எல்லாம் பண்ணுவீங்களா: எச்.ராஜாவை கலாய்த்த ஆடம்ஸ்

Monday, October 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் போன்ற பெரிய நடிகரின் படத்தின் மீது மட்டும் வழக்கு போடுபவர்கள் சின்ன படத்தின் மீதும் வழக்கு போட்டால் அந்த படத்திற்கும் இலவச விளம்பரம் கிடைக்கும் என பிரபல விஜே மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆடம்ஸ் கலாய்த்துள்ளார்

இன்று ஆசிஃப் குரேஷி என்பவர் இயக்கிய 'உத்தரவு மகாராஜா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜே ஆடம்ஸ், 'விஜய் நடித்த 'சர்கார்' படத்திற்கு அந்த படத்தின் கதை என்னோடது என்று கூறி கேஸ் போட்டு புரமோஷன் செய்கின்றனர். அதேபோல் இந்த படத்திற்கும் யாராவது கேஸ் போடும்படி நான் கேட்டுக்கொள்கிறேன். பெரிய படத்துக்கு மட்டுமே புரமோஷன் செய்து சின்ன படத்திற்கு புரமோஷன் செய்யாமல் இருப்பதால் எங்களுக்கு ஆதங்கம் ஏற்படுகிறது.

அரசியல்வாதிகளும் இந்த விஷயத்தில் பாரபட்சம் செய்கின்றனர். மெர்சல்' படம் குறித்து விமர்சனம் செய்து அந்த படத்தை புரமோஷன் செய்த எச்.ராஜா அவர்கள், ஆசிப் குரேஷி என்ற முஸ்லீம் இயக்குனர் இயக்கிய இந்த படத்தையும் விமர்சனம் செய்தால் படத்திற்கு நல்ல புரமோஷன் கிடைக்கும். அவர் இதுபோன்ற படத்திற்கும் புரமோஷன் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்' என்று ஆடம்ஸ் பேசினார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.