close
Choose your channels

பிரதமரின் அலுவலகம் விற்பனைக்கா??? OLX இல் வெளியான விளம்பரத்தால் புது சர்ச்சை!!!

Saturday, December 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரதமரின் அலுவலகம் விற்பனைக்கா??? OLX இல் வெளியான விளம்பரத்தால் புது சர்ச்சை!!!

 

கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் நின்று வெற்றிப் பெற்றதன் மூலம் இந்தியப் பிரதமர் ஆனார். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பிரதமரின் எம்.பி. அலுவலகம் விற்பனைக்கு வந்திருப்பதாக நேற்று OLX இல் ஒரு விளம்பரம் வெளியாகி இருந்தது. இந்த விளம்பரத்தைப் பார்த்த போலீசார் அதிர்ந்துபோய் உடனே அந்நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு விளம்பரத்தை நீக்கி உள்ளனர்.

OLX எனும் தனியார் விற்பனைத் தளத்தில் ஸ்மார்ட் போன் முதற்கொண்டு ஆடி கார் வரை விற்பனை செய்யும் வசதி உள்ளது. இந்த வலைத்தளத்தில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் எம்.பி. அலுவலகம் விற்பனைக்கு வந்திருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. OLX இல் வெளியான அந்த விளம்பரத்தில் வாரணாசி ஜவகர் நகர் காலனியில் உள்ள அந்த வில்லா 4 அறைகள் மற்றும் 4 கழிவறைகள் கொண்ட பிரம்மாண்ட கட்டிடம் விற்பனை செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்டு அதில் 7.5 கோடிக்கு விலையும் மதிப்பிடப் பட்டு இருக்கிறது.

மேலும் 6,500 சதுரஅடி கொண்ட எம்.பி அலுவலகத்தின்  புகைப்படமும் அதில் பதிவிடப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கில் புகைப்படம் எடுத்தவர் உட்பட 4 பேரை உத்திரப்பிரதேச காவல் துறை கைது செய்திருக்கிறது. மேலும் லஷ்மிகாந்த் ஓஜா என்ற பெயரில் இந்த கட்டிடம் விற்பனைக்கு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரதமரின் அலுவலகக் கட்டிடத்திற்கே பாதுகாப்பு இல்லையா எனப் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.