close
Choose your channels

'பாகுபலி' வில்லனுடன் மோதிய பிரபுதேவா

Tuesday, October 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா

பிரபுதேவா, லட்சுமி மேனன் நாயகன் நாயகியாக நடித்து வரும் 'எங் மங் சங்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன் கே.எஸ்.சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் இந்த படத்தில் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்திராலட்சுமனன், கும்கி அஸ்வின், காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் 'பாகுபலி' வில்லன் பிரபாகர் வில்லன் வேடத்தை ஏற்றுள்ளார்.

சமீபத்தில் இந்த படத்திற்காக பிரபுதேவாவும் 'பாகுபலி' வில்லன் பிரபாகரும் மோதும் சண்டை காட்சிகள் சென்னை அருகே பொழிச்சலூர் காட்டு பகுதியில் ஏழு நாட்கள் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பில் ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் பங்கெடுக்க மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டது.

பிரபுதேவா இந்த படத்தில் குங்பூ மாஸ்டராக நடிக்கிறார். சண்டைகளை கற்று கொடுக்கும் தொழிலை செய்யும் கூட்டத்தின் தலைவனாக 'பாகுபலி' வில்லன் பிரபாகர் நடிக்கிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரசிகர்களின் கொண்டாட்ட படமாக எங் மங் சங் இருக்கும் என்கிறார் இயக்குனர் அர்ஜுன்.M.S. அம்ரீஷ் இசையில் குருதேவ் ஒளிப்பதிவில் பாசில் நிரஞ்சன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.